யாழ்.கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலையின் பரிசளிப்பு விழா இன்று செவ்வாய்க்கிழமை(29) முற்பகல்-09 மணி முதல் பாடசாலையின் மாலதி சுப்பிரமணியம் அரங்கில் அதிபர் பேரம்பலம் தனபாலசிங்கம் தலைமையில் விமரிசையாக இடம்பெற்றது.
இந்த விழாவில் வடமாகாணக் கல்வியமைச்சர் த.குருகுலராசா பிரதம விருந்தினராகவும், வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.
அதிபர் உரை, கல்வியில் திறமையை வெளிக்காட்டிய மாணவர்களுக்கான பரிசில் வழங்கல், விருந்தினர்கள் உரையைத் தொடர்ந்து இடம்பெற்ற தரம்- 05 மாணவ, மாணவிகளின் கிராமிய நடனம் அங்கு கூடியிருந்த அனைவரையும் கவரும் வகையில் அமைந்திருந்தன. தமிழர்களின் பாரம்பரியக் கலை வடிவங்களான கரகாட்டம், காவடியாட்டம், கும்மியாட்டம் போன்ற பாரம்பரியக் கலை வடிவங்களை மாணவ மாணவிகள் இணைந்து அரங்கேற்றி அசத்தினர்.
தவணைப் பரீட்சைகளில் கூடிய புள்ளிகள் பெற்ற மாணவர்கள், தமிழ்த் தினம் உட்படப் பல்வேறு போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவ, மாணவியருக்கான பரிசில்கள் விருந்தினர்களால் வழங்கி வைக்கப்பட்டன.
குறித்த விழாவில் யாழ்.மாவட்டத்தின் பல்வேறு பாடசாலைகளின் அதிபர்கள், கல்வியியலாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள்,ஓய்வு நிலை அதிபர்கள்,பழைய மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment