கிளிநொச்சி – கனகாம்பிகைகுளம் பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதான மாணவியொருவர் தனக்குத் தானே தீ மூட்டித் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் இன்று புதன்கிழமை(21) அதிகாலை 3.30 அளவில் இடம்பெற்றுள்ளது.
கனகாம்பிகைக்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த கிருஸ்ணகுமார் வர்ணுஜா என்ற மாணவியே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
உயிரிழந்த மாணவியின் தந்தை கடந்த-2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற யுத்தத்தின்போது உயிரிழந்துள்ள நிலையில் மாணவி தாயாரின் உழைப்பில் உயர்தரக் கல்வியைத் தொடர்ந்துள்ளார். மாணவியின் தற்கொலைக்கான சரியான காரணம் இதுவரை தெரியவரவில்லை.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை க் கிளிநொச்சிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment