//]]>

Saturday, December 10, 2016

நுளம்புப் பெருக்கத்திற்குக் காரணமான வகையில் சுற்றுச் சூழல்: ஒன்பது பேருக்கு அபராதம்



யாழ்.கோப்பாய்ப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நுளம்புப் பெருக்கத்திற்குக் காரணமான வகையில் சுற்றுச் சூழலை வைத்திருந்தமை தொடர்பாகக் குற்றம் சாட்டப்பட்ட எட்டுப் பேருக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

குறித்த எட்டுப் பேருக்கும் எதிராக கோப்பாய்ப் பொலிஸார் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர். குறித்த வழக்கு நேற்று முன்தினம் வியாழக்கிழமை(08) யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 

இந்த வழக்கு விசாரணையின் போது குற்றம் சாட்டப்பட்ட இருவர் விசாரணைக்குச் சமூகமளிக்காத நிலையில் ஆறு பேர் மன்றில் ஆஜராகியிருந்தனர். குற்றவாளிகள் குற்றத்தை ஒப்புக் கொண்டதன் அடிப்படையில் ஆறுபேருக்கும் தலா 1500 அபாரமாக விதிக்கப்பட்டது. 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment