உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டிற்கு வித்திட்ட ஈழத்தவராகிய தனிநாயகம் அடிகள் ஆய்வு மையம் இன்று 10.12.2016 காலை இல 125, பிரதான வீதி, யாழ்ப்பாணத்தில் உள்ள குடும்ப மருத்துவ நிறுவகக் கட்டட மேல்த்தளத்தில் சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.
கனடாவைச் சேர்ந்த பிலிப் அன்ரன் சின்னராசாவின் முயற்சியாலும் நிதிப்பங்களிப்பினாலும் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த மையத்தை யாழ். மறைமாவட்ட ஆயர் மேதகு கலாநிதி யஸ்ரின் ஞானப்பிரகாசம் திறந்து வைத்தார்.
சிறப்பு அதிதியாக வடமாகாண அவைத்தலைவர் சீ.வி.கே. சிவஞானம் கலந்து கொண்டார். யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத் தலைவர் பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ் சிறப்புரையாற்றினார்.
ஆய்வுமையத்தை அறிமுகம் செய்து கலாநிதி அ.பி.ஜெயசேகரம் அடிகளார் உரையாற்றினார். இந்த ஆய்வு மையத்திற்கான இணைப்பாளர்களாக கலாநிதி அ.பி. யெயசேகரம் அடிகளாரும் புனித பத்திரிசியார் கல்லூரி அதிபர் அருட்பணி ம.ஜெறோ செல்வநாயகம் அடிகளாரும் செயற்படுகின்றனர்.
அடிகளார் எழுதிய நூல்கள் மற்றும் அவருடன் தொடர்புடைய நூல்கள் யாவும் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் தமிழியல் வரலாற்றை விளக்கும் வகையில் காட்சிப்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
0 comments:
Post a Comment