வடக்கில் அதிபர் சேவை தரப் பரீட்சையில் சித்தியடைந்த அனைவருக்கும் நாளை சனிக்கிழமை(31) நிரந்தர நியமனம் வழங்கப்படும் என வடமாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் இ.ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.
தமது நியமனத்தினை வலியுறுத்தியும், நியமனத்திற்குத் தடையாகவுள்ள வடமாகாணக் கல்வியமைச்சரைப் பதவி விலகுமாறு கோரியும் பரீட்சையில் சித்தியடைந்தவர்கள் நேற்று முன்தினம் புதன்கிழமை யாழிலுள்ள வட மாகாணக் கல்வியமைச்சின் செயலாளர் அலுவலகம் முன்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்தை அடுத்து வட மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் ஆகியோர் இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்த நிலையிலேயே நிரந்தர நியமனம் வழங்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment