பண்டாரகம - கிடல்பிட்டிய பகுதியில் ஏழு பிள்ளைகளைப் பெற்ற 91 வயதான தாய் தனது பிள்ளைகளால் கைவிடப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
இந்தத் தாய் அனைத்துச் சொத்துக்களையும் தனது மூத்த மகளுக்கு வழங்கிய பின் தனது மூத்த மகள் வீட்டிலேயே தங்கியிருந்துள்ளார்.
குறித்த தாயின் மூத்த மகள் அண்மையில் தனது தாயை இளைய சகோதரி வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்.
இளைய சகோதரியோ தனது தாயைப் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தனது தாயைப் பராமரிப்பதால் எந்த வருமானமும் இல்லை என முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்துக் குறித்த தாயைப் பொலிஸ் அதிகாரிகள் முதியோர் இல்லத்தில் கொண்டு சென்று சேர்த்துள்ளனர்.
0 comments:
Post a Comment