இலங்கை அரசாங்கத்தால் கச்சதீவில் புதிதாகக் கட்டப்பட்ட புனித அந்தோனியார் தேவாலயத்தின் திறப்பு விழா நாளை வெள்ளிக்கிழமை(23) இடம்பெறவுள்ளது.
இந்த விழாவில் பங்கேற்பதற்காக இராமேஸ்வரம் தீவுப்பகுதியை சேர்ந்த பாதிரியார்கள், மீனவர்கள் உள்ளிட்ட 100 பேர் படகில் கச்சதீவு செல்வதற்கு இந்திய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
பங்கு தந்தைகள் சகாயராஜ், சந்தியா, ஜெகன் உள்பட 5 பங்கு தந்தைகளும், 5 கன்னியாஸ்திரிகளும், மீனவர்கள் சங்கத் தலைவர்கள் ஜேசு, எமரிட், போஸ், அல்போன்ஸ், சந்தியா மற்றும் மீனவர்கள் உட்பட நூறு பேர் மூன்று படகுகளில் கச்சதீவு தேவாலயம் நோக்கிப் பயணிக்கவுள்ளனர்.
இது தொடர்பாக இராமேஸ்வரம் தாலுகா அலுவலகத்தில், இராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் முருகானந்தம் தலைமையில் பல்துறை அதிகாரிகளின் ஆலோசனைக்கூட்டம் இடம்பெற்றது.
இதன் போது பயண ஏற்பாடுகள் தொடர்பில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.
0 comments:
Post a Comment