//]]>

Wednesday, December 21, 2016

ஜனாதிபதி 2017 ஜனவரிக்கு பின்னர் உயிருடன் இருக்க மாட்டாரா?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும்- 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம்- 27 ஆம் திகதிக்கு பின்னர் உயிருடன் இருக்க மாட்டார் என ஜோதிடரொருவர் ஆரூடம் கூறியிருப்பதில் சதித் திட்டமிருக்கலாம் என அரசாங்கம் சந்தேகம் வெளியிட்டுள்ளது.

பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை(20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த அமைச்சின் செயலாளர் நிமால் போபகே குறித்த ஆரூடக்  கணிப்பு உண்மைக்கு புறம்பானது எனக் குறிப்பிட்டார்.

கடந்த 1987 ஆம் ஆண்டு கடற்படையில் பணியாற்றிய போது இந்தியாவின் முன்னாள் பிரதமராகவிருந்த ராஜீவ் காந்தியைத் தாக்கிய ரோஹன விஜயமுனி என்பவரே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும்- 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம்- 27 ஆம் திகதிக்கு பின்னர் உயிருடன் இருக்க மாட்டார் ஆரூடம் கூறியிருந்தார்.

இந் நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறித்து வெளியாகியுள்ள ஜோதிடரின் ஆரூடக்  கணிப்பின் பின்னணியைக்  கண்டறியும் நோக்குடன் பொலிஸ்மா அதிபரிடம் இது தொடர்பான காணொளி கையளிக்கப்பட்டுள்ளது. இதனை ஆராய்ந்த போது ஜோதிடரின் ஆரூடம் உண்மைக்கு புறம்பானது எனக்  கண்டறியப்பட்டுள்ளதாக ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.

சமூக இணையத்தளத்தின் மூலம் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டுவரும் இந்தக் காணொளி தொடர்பாக ஆழமாக ஆராய்ந்தால் இது தொடர்பான உள்நோக்கத்தினைக் கண்டறியமுடியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment