யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் முன்னெடுக்கும் 'சி.வை.தாமோதரம்பிள்ளை நினைவரங்கம்' நிகழ்வு எதிர்வரும்-27 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல்-04 மணிக்கு யாழ்.நல்லூர் நாவலர் கலாசார மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
தமிழ்ச்சங்கத் தலைவர் பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் சி.வை.தா. பற்றிய பதிவுகள் ஒரு மீள் நோக்கு என்ற தலைப்பில் நினைவுச் சொற்பொழிவை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் முதுநிலை விரிவுரையாளர் செல்வ அம்பிகை நந்தகுமரன் நிகழ்த்துவார்.
அத்துடன் நிகழ்வில் கலந்து கொள்வோருக்குப் பேருரை அச்சுருவில் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment