அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் செயல்பாடுகள் குறித்து நடந்தப்பட்ட கருத்துக் கணிப்பில், அந்நாட்டு மக்கள் ட்ரம்ப் உறுதியானவர் என்றும் ஆனால் பக்குவமில்லாதவர் என்றும் கூறியுள்ளனர்.
சமீபத்தில் நடத்தப்பட்ட இக் கருத்துக் கணிப்பு குறித்து சினுவா செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், "குவின்னிபைக் பல்கலைக்கழகம் ட்ரம்ப் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான காரணங்கள் குறித்து அமெரிக்க குடிமக்களிடம் நடத்திய கருத்துக் கணிப்பை வியாழக்கிழமை வெளியிட்டது.
இந்தக் கருத்து கணிப்பின்படி 68% பேர் ட்ரம்ப் உறுதியானவர் என்றும், 65% பேர் புத்திக்கூர்மையுடைவர் என்றும், 62% பேர் பக்குவமில்லாதவர் என்றும் கூறியுள்ளனர்" என்று தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்று ஐந்து நாட்களில் குடிமக்கள் என்ன நினைக்கிறார்கள் என்ற அடிப்படையில் இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.
இந்தக் கருத்துக் கணிப்பில் 36% பேர் ட்ரம்ப் அதிபராக ஏற்றுக் கொண்டுள்ளனர். 44% பேர் ட்ரம்ப்பை அதிபராக ஏற்றுக் கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தக் கருத்துக் கணிப்பில், ட்ரம்ப்பின் நடவடிக்கைகள் அரசியல் கட்சிகளுக்கிடையேயும், பாலியல் ரீதியாகவும், இன ரீதியாகவும் எந்தப் பிளவையும் ஏற்படுத்தவில்லை என்றும் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசுக் கட்சியைச் சேர்ந்த 81% ட்ரம்ப்பை ஏற்றுக் கொண்ட நிலையில் ஜனநாயகக் கட்சியில் 76 % பேர் ட்ரம்ப்பை அதிபராக ஏற்றுக் கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
ஆண்களில் 41% பேர் ட்ரம்ப்பை அதிபராக ஏற்றுக் கொண்ட நிலையில், பெண்களில் 50% பேர் ட்ரம்ப்பை அதிபராக ஏற்றுக் கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளனர். ட்ரம்ப்புக்கு ஆதரவாக வெள்ளை இனத்தவரில் 43% பேரும், ட்ரம்ப்புக்கு எதிராக கருப்பினத்தவரில் 55% பேரும் வாக்களித்துள்ளனர்
இந்தக் கருத்துக் கணிப்பில் அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் வாழும் 1,190 பேர் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment