ஜல்லிக்கட்டுக்கு
நிரந்தரத் தீர்வு கோரியும், பீட்டா அமைப்புக்கு தடை விதிக்கக் கோரியும் இளைஞர்கள்
தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மதுரை அலங்காநல்லூரில்
ஜல்லிக்கட்டு நடத்த இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்துவிட்டனர்.
எனினும்,
சில பகுதிகளில் காவல் துறையின் உதவியுடன் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது.
சென்னை மெரீனாவில்
பொதுமக்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் பெருகி வருகிறது
இன்று ஞாயிற்றுக்கிழமை
விடுமுறை தினம் என்பதால் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் போலீஸார் தினறி வருகின்றனர்.
எனினும், இளைஞர்கள் சாலையில் நின்றுகொண்டு போலீஸாருக்கு பக்கபலமாக உதவி வருகின்றனர்.
எழுச்சி போராட்டம்
இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஜல்லிக்கட்டுக்காக
மத்திய அரசும், மாநில அரசும் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை மக்கள் எதிர்பார்த்து
காத்திருக்கின்றனர்.
0 comments:
Post a Comment