//]]>

Monday, January 23, 2017

தென்னிந்திய சினிமாவில் ஈழத் தமிழ் பெண்ணுக்கு வாய்ப்பு (Photos)


கனடாவில் வாழும் ஈழத் தமிழ் பெண்ணுக்கு தமிழ் சினிமா படத்தில் பாடுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.

லக்ஷ்மி சிவனேஸ்வரலிங்கம் என்ற ஈழப் பெண்ணுக்கே இந்த வாய்ப்பு கிடைக்கப் பெற்றுள்ளது. தமிழ் சினிமாவில் விரைவில் திரைக்கு வரவுள்ள போகன் திரைப்படத்திலலேயே பின்னனி பாடகியாக அறிமுகமாகி பாடல் ஒன்றை பாடியுள்ளார்.

இசையமைப்பாளர் டி.இமான் மூலமே ,கனடாவில் வாழும் இலங்கை தமிழ் பெண்ணான லக்ஷ்மிக்கு இந்த வாய்ப்பு கிடைக்கப்பெற்றுள்ளது.

மேலும்,இந்திய பிரதான தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக அறிமுகமாகியுள்ள முதல் ஈழ பெண்ணே லக்ஷ்மி சிவனேஸ்வரலிங்கம் ஆவார்.

குறித்த ஈழப் பெண் தனது மூன்று வயதிலெயே இசை மீது அதிக ஆர்வம் செலுத்தி வந்ததுடன்,கர்நாடக சங்கீதத்தையும் கற்க ஆரம்பித்துள்ளார்.
கனடாவில் தயாரிக்கப்பட்ட அப்பா என்ற படத்திற்கு சிறுவயதிலே யே பின்னணிப் பாடகராகவும் அறிமுகமாகியுள்ளார்.

இசை பட்டம் பெற்ற லக்ஷ்மி, தற்போது டொராண்டோ பல்கலைக்கழகத்தில் குரல் நடிப்புக்கான ஸ்பெஷலிஸ்ட் ஆக பணியாற்றி வருகின்றார்.

பல திறமை கொண்ட லக்ஷ்மி, ஆங்கிலம், ஹிந்தி, ஜெர்மன், இத்தாலியன், பிரஞ்சு, லத்தீன் ஆகிய  மொழிகளிலும் பாடல் பாடுவார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment