//]]>

Wednesday, January 25, 2017

யாழ்.ஊர்காவற்துறையில் கர்ப்பிணிப் பெண் படுகொலை: சந்தேகநபர்கள் இருவருக்கு விளக்கமறியல்

யாழ்.ஊர்காவற்துறை சுருவில் பகுதியில் கர்ப்பிணிப் பெண்ணொருவர் கோடரி வெட்டுக்குள்ளாகி உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புபட்டதாகத் தெரிவித்துக்  கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களையும் எதிர்வரும் பெப்ரவரி மாதம்-8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை  நீதவான் இன்று புதன்கிழமை(25) உத்தரவிட்டுள்ளார். 

ஏழு மாத கர்ப்பிணியான ஞானேஸ்வரன் மேரி ரம்சிகா (வயது-27) என்ற பெண் வீட்டில் தனித்திருந்த வேளையில் கொடூரமான முறையில் நேற்றுக் கொலை செய்யப்பட்டிருந்தார்.முச்சக்கரவண்டியொன்றில் வந்தவர்கள் பகல்-11 மணியளவில் தனித்திருந்த மேற்படி பெண்ணின் வீட்டுக்குள் சென்று அவர் மீது தாக்குதல் நடாத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகேகிக்கப்படும் சகோதரர்களான இருவர் மோட்டார்ச் சைக்கிளில் தப்பிச் செல்ல முற்பட்ட போது ஊர்காவற்துறைப் பொலிஸாரினால் மண்டைதீவுச் சந்தியில் வைத்துக் கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும்  இன்று ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன் போது வழக்கை விசாரித்த நீதவான் எம்.றியாழ் சந்தேக நபர்கள் இருவரையும் எதிர்வரும் பெப்ரவரி மாதம்-08 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்தார். 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment