//]]>

Wednesday, December 14, 2016

சுமணரத்ன தேரர் 50 ஆயிரம் ரூபா பெறுமதியான இரு சரீரப்பிணையில் விடுவிப்பு

மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராம விகாதாதிபதியும் கிழக்கு மாகாணப் பிரதி சங்கநாயக்கருமான அம்பிட்டிய சுமணரத்ன தேரரை 50ஆயிரம் ரூபா பெறுமதியான இரு சரீரப்பிணையில் விடுதலை செய்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி இன்று புதன்கிழமை(14) உத்தரவிட்டுள்ளார்.  எதிர்வரும் ஜனவரி மாதம்-25 ஆம் திகதி அவரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் நீதவானால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

பொதுபலசேனவின் வருகையால் மட்டக்களப்பு நகரில் கடந்த-03 ஆம் திகதி பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டிருந்தது. 
பொதுபல சேனவின் வருகை தடுக்கப்பட்டதைத் தொடர்ந்து  நீதிமன்றத்தால் விடுக்கப்பட்ட தடை உத்தரவையும் மீறி மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு நகரில் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. 

தேரரின் ஆர்ப்பாட்டத்துக்கு மட்டக்களப்பு நகரில் தமிழ் மக்கள்  ஒன்று கூடி எதிர்ப்புத் தெரிவித்தனர்.  

பொதுமக்களைப் பிரதான வீதியில் ஒன்றுதிரட்டி சமாதானத்துக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் கலகத்தை உருவாக்குவதற்கு உடந்தையாக இருந்தார் என்ற குற்றச்சாட்டப்பட்டு சுமணரத்ன தேரருக்கெதிராக மட்டக்களப்புப் பொலிஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர். இதனடிப்படையில் இன்று தேரர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையிலேயே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவு பிறப்பித்துள்ளார். 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment