யாழ். வல்வெட்டித்துறையின் முன்னாள் நகர சபைத் தலைவரும், எழுத்தாளருமான கலாபூஷணம் வல்வை ந. அனந்தராஜ் எழுதிய 'வல்வையின் முதுசொம்' தமிழர்களின் வரலாற்று ஆவண நூல் வெளியீட்டு விழா நேற்று வெள்ளிக்கிழமை(20) பிற்பகல் இடம்பெற்றது.
பிற்பகல்-03 மணி முதல் வடமராட்சி வடக்குப் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலர் த. ஜெயசீலன் தலைமையில் இந்த விழா நடைபெற்றது.
நூல் வெளியீட்டுரையை வடமராட்சி வடக்குப் பிரதேச செயலகக் கலாசாரப் பேரவையின் செயலாளர் அ. சிவஞானசீலன் நிகழ்த்தியதைத் தொடர்ந்து நூலின் நயப்புரையை யாழ்ப்பாணப் பல்கலைக் கழக சமூகவியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் இ. இராஜேஷ்கண்ணாவும் ஆற்றினார்.
நூலைப் பிரதேச செயலர் த.ஜெயசீலன் வெளியிட்டு வைக்க முதல் பிரதியை கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரியின் ஓய்வு நிலை உபஅதிபர் கலைப்பரிதி சிவா.கிருஷ்ணா மூர்த்தி பெற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து சிறப்புப் பிரதிகள் வழங்கி வைக்கப்பட்டன. ஏற்புரையை நூலாசிரியர் வல்வை ந. ஆனந்தராஜ் நிகழ்த்தினார்.
0 comments:
Post a Comment