//]]>

Saturday, January 21, 2017

யாழ்.குடாநாட்டில் பரவலாகக் கடும் மழை (Photos)


யாழ்.குடாநாட்டில் இன்று சனிக்கிழமை(21) பிற்பகல்-03 மணி தொடக்கம் தற்போது வரை பரவலாகக் கடும் மழை பொழிந்து வருகிறது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

மாரி காலம் போல இடைவிடாது கொட்டும் மழையால் யாழ்.குடாநாட்டின்  தாழ் நிலப் பகுதிகள் பலவற்றிலும், பல்வேறு வீதிகளிலும், விவசாய நிலங்களிலும் மழை வெள்ளம் தேங்கி நிற்பதை அவதானிக்க முடிகிறது. 

கடும் மழையுடன் அவ்வப்போது பலத்த காற்றும் வீசுகிறது. 

இதேவேளை,இன்று காலை-09 மணி முதல் நண்பகல்-12 மணி வரையும் யாழ்.குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மிதமான மழை பொழிந்தமையும் குறிப்பிடத்தக்கது. 







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment