யாழ் குடாநாட்டில் மழை நீரை சேமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக மழைநீர் சேகரிப்பு முறையை அமைக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இலங்கையும், இந்தியாவும் கைச்சாத்திட்டுள்ளன. இதற்கென 300 மில்லியன் ரூபா செலவிடப்படும்.
இலங்கைக்கான இந்தியாவின் பதில் உயர்ஸ்தானிகர் மற்றும் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சின் செயலாளர் சீ.சிவஞானசோதி ஆகியோர் இதில் கைச்சாத்திட்டுள்ளார்கள்.
யாழ் மாவட்டத்தில் 3000 மழை நீர் சேகரிப்பு தொட்டிகள் அமைக்கப்பட இருக்கின்றன. இதன் பராமரிப்பு, செயற்பாடு என்பன பற்றி வீட்டு உரிமையாளர்களுக்கு விளக்கம் அளிக்கப்படவுள்ளன.
0 comments:
Post a Comment