முல்லைத்தீவு கேப்பாப்புலவுப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்களின் நிலமீட்புப் போராட்டத்திற்கு ஆதரவாக இன்று சனிக்கிழமை(11) யாழ் மத்திய பேருந்து நிலையம் முன்பாகச் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் ஏற்பாட்டில் கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது.
காலை- 9.30 மணி முதல் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் ஏற்பாட்டில் தன்னார்வ இளைஞர்கள் மற்றும் அமைப்புக்கள் ஒன்றிணைந்து குறித்த போராட்டத்தினை மேற்கொண்டனர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அரசாங்கத்திற்கெதிராகவும், போராட்டக்காரர்களுக்கு ஆதரவாகவும் பல்வேறு சுலோகங்களைத் தாங்கியிருந்ததுடன், கோஷங்களையும் எழுப்பினர்.
முற்பகல்-11 மணி வரை குறித்த போராட்டம் இடம்பெற்றதைத் தொடர்ந்து தமது ஆதரவைப் போராட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்களுக்குத் தெரிவிக்கும் முகமாகக் கேப்பாப்புலவிற்குச் சென்றுள்ளனர்.
0 comments:
Post a Comment