//]]>

Thursday, February 2, 2017

வாள்வெட்டுக்களுடன் தொடர்புடையவர்களைக் கைது செய்து பிணையில் விடுவிப்பது சரியான வழிமுறையல்ல; சுரேஷ் பிரேமச்சந்திரன் காட்டம்

சிறந்ததொரு சமூதாயத்தை உருவாக்க வேண்டுமானால் வாள்வெட்டுக்களுடன் தொடர்புடையவர்களைக் கைது செய்து பிணையில் விடுவிப்பது சரியான வழிமுறையாக இருக்காது எனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் இவ்வாறான குற்றச்ச்சாட்டுக்களுடன் தொடர்புடையதாகத் தெரிவித்துக் கைது செய்யப்படுபவர்கள் உண்மையான குற்றவாளிகளா? என இனங்காணப்பட்டுத் தகுந்த தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார். 

மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள யாழ் .நல்லூர் அரசடி வீதியிலுள்ள வர்த்தக நிலையத்திலிருந்தவர்கள் மீது மோட்டார்ச் சைக்கிளில் வந்த இளைஞர்கள் குழு கடந்த திங்கட்கிழமை(02) இரவு நடாத்திய வாள்வெட்டுச் சம்பவம் தொடர்பில் இன்று வினாவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், 

நல்லூரில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவம் போன்ற குற்றச்சாட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்களுக்கு ஏனையவர்கள் திருந்தக் கூடியவாறான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். 

முன்னர் இடம்பெற்ற பல்வேறு வாள்வெட்டுச் சம்பவங்களுடன் இராணுவத்தினர் தொடர்புபட்டுள்ள போதும் நல்லூரில் இடம்பெற்ற வாள்வெட்டுத் தொடர்பான பின்பலங்கள், பின்புலங்கள் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது எனவும் சுட்டிக் காட்டினார். 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment