சுமந்திரன் படுகொலை முயற்சி தொடர்பாகப் புலனாய்வுத் துறையினர் திட்டமிட்டு அறிக்கை தயாரித்துள்ளதாகக் கூறுகிறார்கள். இந்த விடயம் உண்மையாகவுமிருக்கலாம், பொய்யாகவுமிருக்கலாம். அரசியற் தேவைகளுக்காகவும் இவ்வாறான விடயங்களைத் தெரிவிக்கலாம். ஆனால், இந்த விடயங்களையெல்லாம் நாங்கள் உள்வாங்க வேண்டிய அவசியமில்லை. சுமந்திரனின் படுகொலை முயற்சி தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ளவர்களின் விபரங்கள், இந்த விடயம் சம்பந்தமாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?, கைது செய்யப்பட்டுள்ள நபர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ள பொருட்கள் என்ன? போன்ற விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதியோ, பிரதமரோ, பொறுப்பு வாய்ந்த அமைச்சரோ பாராளுமன்றத்தில் அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டும் என நாங்கள் கோரிக்கை விடுக்க விரும்புகிறோம் எனத் தெரிவித்தார் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தற்போதைய வடமாகாண சபை உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம்.
இன்று வியாழக்கிழமை(02) நண்பகல்-12 மணி முதல் யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
12 ஆயிரம் முன்னாள் போராளிகள் புனர்வாழ்வு பெற்ற நிலையில் வீடுகளில் வாழ வழியின்றித் தள்ளாடிக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களை வீடுகளில் சென்று கைது செய்வது போன்ற செயற்பாடுகளில் இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் ஈடுபட்டால் மீண்டும் போராட்டம் வெடிக்க வேண்டிய நிலைமை ஏற்படலாம். முன்னாள் போராளிகள் மட்டுமல்லாமல் எமது மக்கள் கூட மீண்டும் ஆயுதப் போராட்டம் வேண்டாம் என்ற மனநிலையிலிருக்கிறார்கள். இன்று இல்லை எனில் என்றும் இல்லை என அரசாங்கம் நினைக்க வேண்டாம்.
1971 ஆம் ஆண்டு தொடக்கம் 1989 ஆம் ஆண்டு வரை ஜே.வி.பி அரசாங்கத்திற்கெதிரான கிளர்ச்சியில் ஈடுபட்டது. ஆகவே, இலங்கை அரசாங்கத்தின் அடக்கு முறைக்கு எதிராக பலஸ்தீன மக்கள் தமக்கெதிரான அடக்கு முறைகளுக்கு எதிராகக் கல்வீசித் தாக்குதல் நடத்துவதைப் போன்றாவது இலங்கையில் நிலைமை உருவாகும்.
ஆகவே, புனர்வாழ்வுக்குட்பட்ட முன்னாள் போராளிகளை நீங்கள் இம்சைக்குட்ப்படுத்துவீர்களானால் மக்களுடைய சீற்றங்களுக்கு ஆளாகுவீர்கள் எனவும் அவர் மேலும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
0 comments:
Post a Comment