யாழ்.குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பல நாட்களுக்குப் பின்னர் இன்று திங்கட்கிழமை(13) இரவு கடும் மழை கொட்டித் தீர்த்துள்ளது.
இரவு-08 மணியளவில் ஆரம்பமான மழை வீழ்ச்சி இரவு-10.30 மணி வரை தொடர்ச்சியாக நீடித்துள்ளது. கடந்த பல நாட்களாகக் கடும் வெப்பமுடனான காலநிலை நீடித்த நிலையிலேயே இந்தத் திடீர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
பிற்பகல்-06 மணிக்குப் பின்னர் மிதமான மழை பொழிந்தமையை அவதானிக்க முடிந்தது.
கடும் மழையுடன் அவ்வப்போது பலத்த காற்றும் வீசியமை இங்கு குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment