யாழ்ப்பாணம் வடமராட்சி கம்பர்மலை சேனப்பு பகுதியில் உள்ள கிணறு ஒன்றிற்குள் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் அதே இடத்தைச் சேர்ந்த நடராஜா ரவீந்திரன் (வயது 50) எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்ட வல்வெட்டித்துறை மரண விசாரணை அதிகாரி பா.சுசீந்திர சிங்கம் சடலத்தை வல்வெட்டித்துறை வைத்தியசாலையில் ஒப்படைத்து பிரேத பரிசோதனையினை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
0 comments:
Post a Comment