//]]>

Saturday, February 4, 2017

யாழ். வல்வெட்டித்துறையில் கடலோர அன்னை வேளாங்கண்ணி மாதா தேவாலய திறப்பு விழா (Photos)


யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் கடலோரமாக அமைந்துள்ள இடத்தில் அமைக்கப்பட்டுள்ள அன்னை வேளாங்கண்ணி தேவாலயம் நாளை (ஞாயிற்றுக் கிழமை) பிற்பகல் 5.00 மணிக்கு சக்கோட்டை பங்குத் தந்தை அருட்திரு கான்ஸ் வவர்  அடிகளார் அவர்களால் திறந்து வைக்கப்படவுள்ளது.

தென்னிந்தியாவில் உள்ள வேளாங்கண்ணி மாதாவின் ஆலயத்தின் சாயலில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆலயம் வல்வெட்டித்துறை மக்கள் கடற்றொழிலுக்குச் செல்லும் பொழுதும், நல்ல காரியங்களை மேற்கொள்ளும் பொழுதும் அன்னை வேளாங்கண்ணியை வணங்கிய பின்னரே செல்வார்கள்.

அந்த அன்னையின் திருச்சொருபத்தை புதிதாகக் கட்டிய கட்டிடத்தில சக்கோட்டை பங்குத் தந்தை அவர்களால் ஸ்தாபித்து வைக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment