இலங்கையின் 69 ஆவது சுதந்திர தினத்தை தமிழ்தேசிய இனத்தின் துக்க தினமாக அறிவிக்கும் படிகோரி யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக பலத்த பொலிஸ் பாதுகாப்புக்கும் மத்தியில் கவனயீர்ப்பு போராட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் தலைமையில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் இன்றைய தினம் காலை நடத்தப்பட்டது.
தேசிய சுதந்திர தினத்தை தமிழ்தேசிய இனத்தின் துக்கதினமாக அறிவிக்ககோரியும், “காணாமல்போன இருபதாயிரம் பேருக்கு அரசே பதில் சொல்”, “தமிழ் அரசியல்கைதிகளை விடுதலை செய்”, “இராணுவம் ஆக்கிரமித்துள்ள நிலங்களை விடுதலை செய்”, புதிய நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதை தடுத்து நிறுத்து”, “இனப்படுகொலை மற்றும் போர்குற்றங்களுக்கான நீதி விராணையை சர்வதேச நீதிபதிகளிடம் ஒப்படை”, இனப்பிரச்சினைக்கு சர்வதேச மத்தியஸ்த்ததுடன் தார்வினை காண்” ஆகிய 6 கோரிக்கைகளை முன்வைத்து இந்த கவனயீர்ப்பு போராட்டம் கறுப்புபட்டி அணிந்து நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் மறுபக்கம் யாழ்.மாவட்ட செயலகத்திற்குள் சுதந்திர தின நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.
இதேவேளை இந்தக் கவனயீர்ப்பு போராட்டத்தை நகர விடாமல் பொலிஸார் வீதித்தடைகளை அமைத்து தடுத்துள்ளதுடன், பலத்த பாதுகாப்புக்கும் மத்தியில் இந்த போராட்டம் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment