//]]>

Tuesday, February 21, 2017

யாழ். கல்வயல் கந்தசுவாமி எழுதிய ஆன்மீகப் பொய்கை நூலின் வெளியீட்டு விழா நல்லூரில் வெகு விமரிசை (Photos)


யாழ்ப்பாண மாவட்டத்தில் சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட  கல்வயலைச் சேர்ந்த ஆர்.வீ. கந்தசுவாமி அவர்கள் எழுதிய ஆன்மீகப் பொய்கை என்ற நூலின் வெளியீட்டு விழா கடந்த 19.02.2017 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு நல்லூர் துர்க்காதேவி மணிமண்டபத்தில் நடைபெற்றது.

பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தகைசார் வாழ்நாள் பேராசிரியர் பொன். பாலசுந்தரம்பிள்ளை பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு நூலை வெளியிட்டு வைத்தார்.

நிகழ்வில் வரவேற்புரையை கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் முன்னாள் பிரதி அதிபர் கலாநிதி செ.திருநாவுக்கரசு ஆற்றினார். ஆசியுரைகளை நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தரதேசிகஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், வேதாந்தமடத்தைச் சேர்ந்த ஸ்ரீமத் வேதவித்யாசாகரர் சுவாமிகள் ஆகியோர் ஆற்றினர்.

நூலாசிரியர் பற்றிய அறிமுகவுரையை நல்லூர் ப.நோ.கூட்டுறவுச் சங்க தலைவர் பெ.கனகசபாபதி ஆற்றினார். நூலின் வெளியீட்டுரையை கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் பிரதி அதிபர் ச.லலீசன் மேற்கொண்டார். நூல் பற்றிய கருத்துரையை ஸ்ரீபாத தேசிய கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர் சி.க. கமலநாதன் நிகழ்த்தினார்.

நூலின் முதற்பிரதியை யாழ். பஷன் ஹவுஸ் உரிமையாளர் ரி.கந்தசாமி பெற்றுக்கொண்டார். நல்லூரான் பஜனைக் குழுவினரின் பஜனை நிகழ்ச்சி இடம்பெற்றது. நூலாசிரியரின் மகள் கலா றெனாதோ நன்றியுரை ஆற்றினார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment