//]]>

Thursday, March 16, 2017

யாழ். மட்டுவிலில் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை நினைவுப் பேருரை


யாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேசத்தின் மட்டுவில் வடக்கு சந்திரமௌலீச வித்தியாலயத்தில் பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை நினைவுப் பேருரை அண்மையில் இடம்பெற்றது.

வித்தியாலய அதிபர் க. எழிலழகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கப் பொதுச் செயலாளரும் கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் பிரதி முதல்வருமாகிய ச.லலீசன் மட்டுவில் பெற்ற மாமணி என்ற பொருளில் நினைவுப் பேருரையாற்றினார்.

நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தென்மராட்சிக் கல்வி வலய ஆரம்பக் கல்வித்துறையின் ஓய்வுநிலை  உதவிக் கல்விப் பணிப்பாளரும் பண்டிதமணியின் உறவினருமாகிய த.ஸ்ரீஸ்கந்தராஜா கலந்து கொண்டார்.

பண்டிதமணியின் நினைவுநாளையொட்டி பாடசாலை மாணவரிடையே நடத்தப்பட்ட போட்டிகளுக்கான பரிசில்கள் வழங்கப்பட்டன.

பரிசில்களை ஓய்வுநிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் த.ஸ்ரீஸ்கந்தராஜா, சொற்பொழிவாளர் ச.லலீசன், ஓய்வுநிலை ஆசிரியர் ந.அம்பிகைப்பிள்ளை ஆகியோர் வழங்கிக் கௌரவித்தனர்.

நிகழ்வில் அயற்பாடசாலை அதிபர்கள், பெற்றோர்கள், மட்டுவிலில் உள்ள பண்டிதமணியின் உறவினர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். மாணவர்களின் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.

பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை மட்டுவிலைப் பிறப்பிடமாகக் கொண்டவர் என்பதுவும் சந்திரமௌலீச வித்தியாலயத்தின் பழைய மாணவர் என்பதுவும் பாடசாலையில் அவரது நினைவாக சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளது என்பதுவும் குறிப்பிடத்தக்கன.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment