யாழ்.குடாநாட்டின் பிரதான சந்தைகளில் ஒன்றான திருநெல்வேலிப் பொதுச் சந்தையில் நேற்று செவ்வாய்க்கிழமை(14) ஒரு கிலோ கத்தரிக்காய் 20 ரூபாவாகவும், ஒரு கிலோ கோவா-20 ரூபா முதல் 25 ரூபா வரை, ஒரு கிலோ தக்காளி-30 ரூபா, ஒரு கொலோ கிலோ கரட்- 40 ரூபா, ஒரு கிலோ பீற்ரூட்- 30 ரூபா முதல் 40 ரூபா வரை, ஒரு கிலோ பூசணி- 40 ரூபாவாகவும் விறபனையாகின்றன. அத்துடன் ஏனைய மரக்கறிகளின் விலைகளும் குறைவடைந்தே காணப்படுகின்றன.
மரக்கறிகளின் விலைகளில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளமையால் விவசாயிகள் மட்டுமன்றி வியாபாரிகளும் பாதிப்பினை எதிர்நோக்கியுள்ளனர்.
குறிப்பாக கத்தரி, கோவா போன்ற மரக்கறி வகைகள் யாழ். மாவட்டத்தில் வலிகாமம் பகுதியில் அதிகளவு பயிரிடப்பட்டுள்ளமையால் விளைச்சலும் அமோகமாகக் காணப்படுகின்றது.
இதன் காரணமாகப் பெருமளவு கத்தரிகள் சந்தைகளுக்கு எடுத்து வரப்படுகின்றமையால் யாழ்.திருநெல்வேலிச் சந்தை மற்றும் சுன்னாகம், மருதனார்மடம் உள்ளிட்ட சந்தைகளில் கத்தரிகள் குவிந்து காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment