யாழ். மாவட்டத் தேசோதய சபையின் ஏற்பாட்டில் அண்மையில் யாழ். சர்வோதய மண்டபத்தில் இடம்பெற்ற மக்கள் திலகம் எம்.ஜி. ஆரின் நூறாவது ஜனன தின விழாவில் கலை, கலாசார உயர்ச்சிக்காகவும், மக்களின் கலாசார மேம்பாட்டிற்காகவும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய மக்கள் கலைஞர்களைக் கெளரவிக்கும் முகமாக மூத்த ஓதுவார் க.ந.பாலசுப்பிரமணியத்திற்குக் 'க லைமாமணி' விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்டுள்ளது.
யாழ். ஏழாலை மேற்கு ஸ்ரீ விநாயகர் ஐக்கிய நாணய சங்கத்தின் கூட்டுறவாளர் தின விழா அண்மையில் ஏழாலை மேற்கு முத்தமிழ் மன்றக் கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற போது அவரது சமயப் பணியைப் பாராட்டிக் 'கலாபூஷண' எனும் விருது வழங்கப்பட்டுள்ளது.
குறித்த இரு விருதுகளும் சில நாட்கள் இடைவெளியில் அவர் பெற்றுக் கொண்டுள்ளார்.
கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக யாழ்.குடாநாட்டின் ஆலயங்கள் தோறும் புராண படனங்களையும், தெய்வத் திருமுறைகளையும் பொருள் விளங்குமாறு பண்ணுடன் ஓதுகின்ற தெய்வத் திருப்பணியை மேற்கொண்டு வரும் மூத்த ஓதுவார் க. ந.பாலசுப்பிரமணியம் ஏற்கனவே இலங்கை அரசாங்கத்தால் வழங்கப்படும் உயர் விருதான கலாபூஷணம் விருது மற்றும் பெளராணிகர், புராண படன வித்தகர், சிவஞானச் செல்வர் உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும்,பட்டங்களையும் தனதாக்கியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment