சமூக விஞ்ஞானப் படிப்பு வட்டத்தின் ஏற்பாட்டில் ''மந்திரித்த அரண்மனை அல்ல: பேரரசின் முடிவும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் கருத்தியலின் தோற்றமும்'' எனும் தலைப்பில் சமகால சர்வதேச விவாதங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல் களமானது நாளை ஞாயிற்றுக்கிழமை(19) பிற்பகல்- 3.30மணி முதல் இல- 62, கே.கே.எஸ். வீதி கொக்குவில் சந்தியில் அமைந்துள்ள தேசிய கலை இலக்கியப் பேரவையின் கவிஞர் முருகையன் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.
இந்த நிகழ்வில் அறிமுக உரையினை அகிலன் கதிர்காமர் நிகழ்த்தவுள்ளார்.
மார்க் மசோவர் அவர்களின் 'மந்திரித்த அரண்மனை அல்ல: பேரரசின் முடிவும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் கருத்தியலின் தோற்றமும்' எனும் தலைப்பில் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகப் பதிப்பகம் கடந்த- 2009 ஆம் ஆண்டு வெளியிட்ட நூலானது ஐக்கிய நாடுகள் அமைப்பின் வரலாறு உட்படப் பல்வேறு விடயங்களையும் ஆராய்கிறது.
மேற்படி கலந்துரையாடலில் குறித்த நூலின் சாராம்சம் தமிழிலே முதல் நாற்பது நிமிடங்களுக்கு வழங்கப்படும். அதனைத் தொடர்ந்து 90 நிமிடங்களுக்கு ஐ.நாவுடைய வரலாறு தொடர்பாகவும், தற்கால சர்வதேச ஒழுங்கு மற்றும் அதிகாரம் தொடர்பாகவும், இலங்கைக்கும் ஐ.நாவுக்குமிடையே உள்ள உறவுகள் தொடர்பாகவும் விரிவான கலந்துரையாடல் இடம்பெறும். இந்த விசேட கலந்துரையாடலில் ஆர்வலர்கள் அனைவரையும் பங்குபற்றிப் பயனடையுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment