சேலம் மாவட்டம், பெரியவடகம்பட்டி கிராமத்தில் 1995-ஆம் ஆண்டு ஜூன் 28-ஆம் தேதி பிறந்தவர் மாரியப்பன் தங்கவேலு.
தனது ஐந்தாவது வயதில் பள்ளிக்கு சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக விபத்து ஒன்றில் சிக்கினார்.
இதனால், வலது கால் முட்டிக்கு கீழே இவரது கால் பாதிக்கப்பட்டது.
ஆனால், அவரது மனம் பாதிப்புக்குள்ளாகவில்லை.
விளையாட்டில் தான் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் துளிர்விட்டது.
அவரது பள்ளி ஆசிரியர் ராஜேந்திரன் ஆலோசனைப்படி, உயரம் தாண்டுதல் பயிற்சியில் ஈடுபட தொடங்கினார்.
அப்போது அவருக்கு வயது 14. பள்ளியில் முழு உடல் தகுதி உள்ளவர்கள் பங்கேற்கும் உயரம் தாண்டுதல் போட்டியில் தன்னம்பிக்கையுடன் பங்கேற்றார் மாரியப்பன்.
அவரால் உயரம் தாண்ட முடியுமா?
என்று அனைவரும் பார்த்துக் கொண்டிருந்த வேளையில் தன்னம்பிக்கையுடன் தாண்டி இரண்டாம் இடம் பிடித்தார். எண்ணம் லட்சியமாக மாறியது.
தொடர்ந்து 2013-ஆம் ஆண்டு தேசிய அளவிலான மாற்றுத் திறனாளிகள் போட்டியில் பங்கேற்று தனது விடா முயற்சியை அடுத்தடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் சென்றார்.
அப்போது, கர்நாடகத்தைச் சேர்ந்த பயிற்சியாளர் சத்தியநாராயணா, அவரை தனது பயிற்சி மையத்தில் சேர்த்துக் கொள்ள விரும்பி அழைப்பு விடுத்தார்.
முன்னதாக, கல்லூரி காலத்தில் அவருக்கு தமிழகத்தைச் சேர்ந்த பயிற்சியாளர் கே.இளம்பரிதியும் பயிற்சி வழங்கியுள்ளார்.
உயரம் தாண்டுதலில் பல்வேறு உக்திகளை மாரியப்பனுக்கு அவர் கற்றுக் கொடுத்தார்.
இந்நிலையில், 2015-இல் பெங்களூரில் உள்ள சத்தியநாராயணா பயிற்சி மையத்தில் இணைந்து பயிற்சி பெற்றார் மாரியப்பன்.
கடந்த ஆண்டு (2016) மார்ச் மாதம் வட ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள துனீசியாவில் நடைபெற்ற ஐபிசி கிராண்ட் ஃப்ரீ போட்டியில் பங்கேற்றார்.
அந்தப் போட்டியில் 1.78 மீட்டர் உயரம் தாண்டி தங்கப் பதக்கம் வென்றார்.
அதே ஆண்டு செப்டம்பர் மாதம் பிரேசிலில் நடைபெற்ற ரியோ பாரா ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதிபெற 1.60 மீட்டரே போதுமானது.
இந்தியா என்ற பெயரைத் தாங்கிய டி-ஷர்ட்டை அணிந்து ரியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் களம் இறங்கினார் மாரியப்பன்.
மாற்றுத் திறனாளி ஆடவருக்கான (டி-42 பிரிவு) உயரம் தாண்டுதல் போட்டியில் 1.89 மீட்டர் உயரம் தாண்டி தங்கப்பதக்கம் வென்று இந்தியர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்தார்.
1980-ஆம் ஆண்டு நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் 1.96 மீ. உயரம் தாண்டி நிகழ்த்தப்பட்டதே உலக சாதனையாக உள்ளது. அந்த சாதனையையும் அவர் முறியடிக்க வேண்டும்.
பாரா ஒலிம்பிக் போட்டியில் ஆண்கள் உயரம் தாண்டுதல் பிரிவில் இந்தியர் ஒருவர் தங்கம் வெல்வது இதுவே முதல்முறையாகும்.
இதன்மூலம், இந்திய வரலாற்றில் சரித்திர நாயகர்கள் பட்டியலில் 21 வயது இளைஞர் மாரியப்பன் இடம்பிடித்தார்.
தமிழக அரசு சார்பில் ரூ.2 கோடி பரிசு அளிக்கப்படும் என்று அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இந்தியாவுக்கு பெருமை சேர்த்த இந்த இளைஞர், நாட்டின் குடிமக்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம ஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். எத்தனை பெருமை.
இவரது கனவுக்கு காய்கறி வியாபரம் செய்யும் இவரது தாய் பக்க பலமாக துணை நின்றார் என்று கூறினால் மிகையல்ல.
மாரியப்பனுக்கு சாதாரணமாக இந்த தங்கம் கிடைத்துவிடவில்லை. தனது பயிற்சிகாலத்தில் பாதிக்கப்பட்ட காலில் பல முறை காயம் ஏற்பட்டிருக்கிறது. ரத்தம் சொட்டியிருக்கிறது. வெளிப்புற காயத்தை பொருட்படுத்தாமல் தொடர்ந்து மேற்கொண்ட தீவிர பயிற்சியின் காரணமாகவே இத்தச் சாதனையை அவர் நிகழ்த்தியிருக்கிறார் என்று அறியும்போது நெகிழ்ச்சி ஏற்படுகிறது.
தன்னம்பிக்கையுடனும், விடா முயற்சியுடன் தாம் தேர்ந்தெடுத்த துறையில் ஈடுபட்டால் வெற்றி நிச்சயம் என்பதை உணர்த்தி, பலருக்கும் முன்மாதிரியாக திகழும் மாரியப்பன் பல தடைகளைத் தாண்டிய சாதனையாளர் என்பதில் பெருமை கொள்வோம்.

0 comments:
Post a Comment