//]]>

Sunday, December 10, 2017

யாழில் கடலில் நீராடிய முதியவருக்கு ஏற்பட்ட துயரம்

மரணச் சடங்கிற்கொன்றுக்குச் சென்று விட்டு வீடு திரும்பும் வேளையில் தனது வீட்டிற்கருகிலுள்ள யாழ். பருத்தித்துறை வியாபாரி மூலைக் கடலில் நீராடிய முதியவர் கடல் அலையால் இழுத்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கிப் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் நேற்றுச் சனிக்கிழமை(09) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த மகாதேவன் பிள்ளை கஜானந்தன்(வயது- 69) என்ற முதியவரே மரணமாகியுள்ளார்.

இந்தச் சம்பவம் பருத்தித் துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாகப் பருத்தித் துறைப் பொலிஸார் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment