யாழ்ப்பாணம் வடமராட்சி பிரதேசத்தின் நெல்லியடியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி இன்று காலை 03.03.2017 பயணித்த வடி ரக வாகனம் ஒன்று வல்வை பாலம் தாண்டி 100 மீட்டர் தூரத்தில் விபத்துக்குள்ளாகி வல்வை நீரேரிக்குள் பாய்ந்துள்ளது. சாரதி சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.
மோட்டார் சைக்கிள் குறுக்கே வந்ததால் சாரதி நிலை குலைந்து வாகனம் நீரேரியில் பாய்ந்ததாக தெரிய வருகிறது.
வல்வை நீரேரிக்குள் உள்ள வாகனத்தை அவ்வழியால் செல்லும் பொதுமக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment