சிவன் அறக்கட்டளையின் கல்வி மேம்பாட்டுப் பேரவை அங்குரார்ப்பணமும் சாதனையாளர் கௌரவிப்பும் நேற்றுத் திங்கட்கிழமை(17) காலை-09 மணி முதல் யாழ். நெல்லியடி மத்திய கல்லூரியில் இடம்பெற்றது.
ஓய்வுநிலை மாகாணக் கல்விப் பணிப்பாளர் வ.செல்வராசா தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக குடிசார் பொறியியல் துறைத் தலைவர் ச.சு.சிவகுமார் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் வடமராட்சியின் மூத்த கணித ஆசான் திரு.இராஜரட்ணத்தை சிவன் அறக்கட்டளை ஸ்தாபகர் கணேஸ் வேலாயுதம் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார். தொடர்ந்து கல்வி மேம்பாட்டுப் பேரவை சிவன் அறக்கட்டளை ஸ்தாபகரால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் வடமராட்சிக் கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்துப் பாடசாலைகளிலிருந்தும் க.பொ.த சாதாரணதரம், க.பொ.த உயர்தரப் பரீட்சைகளில் முதல் நிலை பெற்றுச் சித்தியெய்திய மாணவர்களும், தேசிய ரீதியில் புதிய கண்டுபிடிப்புக்களை அறிமுகம் செய்த மாணவர்களும் விருந்தினர்களால் சாதனையாளர் பதக்கமும் சான்றிதழும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.
குறித்த நிகழ்வில் சிவன் அறக்கட்டளை நிறுவுனர் கணேஸ் வேலாயுதம், வட மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கருணாகரன், கரவெட்டி பிரதேச செயலர் சிவசிறீ, வடமராட்சி, தென்மராட்சி, யாழ்ப்பாணம் கல்வி வலயங்களின் பணிப்பாளர்கள், கோட்டக்கல்வி அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment