//]]>

Saturday, June 10, 2017

வடக்கில் 219 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்பட்டது (Photos)


வடமாகாணப் பாடசாலைகளில் நிலவும் கணித, விஞ்ஞான மற்றும் தொழில் நுட்பப் பாடங்களுக்கான வெற்றிடங்களுக்குப்  பட்டதாரி ஆசிரியர்களை உள்ளீர்ப்பு செய்வதற்கான நியமனம் வழ
ங்கும் நிகழ்வு இன்று  சனிக்கிழமை(10)  யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் இடம்பெற்றது. 
காலை 9.30 மணி முதல் இடம்பெற்ற நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு பட்டதாரிகளுக்கான நியமனங்களை வழங்கி வைத்தார்.

 இதன் போது 219 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கி வைக்கப்பட்டது. 
இதன்படி, பெளதீகவியல் பாடத்திற்கு 16 பட்டதாரிகளுக்கும், இரசாயனவியல் பாடத்திற்கு 11 பட்டதாரிகளுக்கும், உயிரியல் பாடத்திற்கு 13 பட்டதாரிகளுக்கும், இணைந்த கணிதம் பாடத்திற்கு 10 பட்டதாரிகளும், உயிரியல் தொழிநுட்பம் பாடத்திற்கு 15 பட்டதாரிகளுக்கும், பொறியியல் தொழி நுட்பம் பாடத்திற்கு 12 பட்டதாரிகளுக்கும், தொழிநுட்பத்திற்கான விஞ்ஞா னம் பாடத்திற்கு 2 பட்டதாரிகளுக்கும் விஞ்ஞான பாடத்திற்கு 95 பட்டதாரிகளுக்கும், கணித பாடத்திற்கு 45 பட்டதாரிகளுக்குமாக மொத்தமாக 219 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment