புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவிடம் விசாரணை நடாத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு யாழ்.ஊர்காவற்துறை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
குறித்த வழக்கு விசாரணை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.எம். றியாழ் முன்னிலையில் இன்று செவ்வாய்க்கிழமை(22) விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போதே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த நிலையில் வித்தியா படுகொலை வழக்கில் திடீர்த் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment