//]]>

Tuesday, August 22, 2017

தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி ஆலய பெருவிழா ஆரம்பம்(Photos)

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ். வடமராட்சி தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி  ஆலய ஏ விளம்பி வருட மஹோற்சவப் பெருவிழா  இன்று செவ்வாய்க்கிழமை(22) அதிகாலை-05 மணிக்குக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. 

இன்றைய  கொடியேற்ற உற்சவத்தில் ஆயிரக் கணக்கானோர் கலந்து கொண்டனர். 

இவ்வாலய பெருவிழாவின் பத்தாம் திருவிழாவான எதிர்வரும்-30 ஆம் திகதி காலை-10 மணிக்குப் பூங்காவனத் திருவிழாவும், 31 ஆம் திகதி காலை-08 மணிக்குக் கைலாசவாகனமும், அடுத்தமாதம்-04 ஆம் திகதி இரவு-07 மணிக்குச் சப்பறத் திருவிழாவும், 05 ஆம் திகதி காலை-09 மணிக்குத் தேர்த் திருவிழாவும், மறுநாள் புதன்கிழமை காலை-08 மணிக்குத் தீர்த்தத் திருவிழாவும், மாலை-06 மணிக்கு மெளனத் திருவிழாவும் இடம்பெறும். 

ஆலய மஹோற்சவப் பெருவிழா காலத்தில் தினமும் காலைத் திருவிழா காலை-08 மணிக்கும், மாலைத் திருவிழா இரவு -07 மணிக்கும் இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.       




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment