நல்லூர் முருகப் பெருமானின் பத்தாம் திருவிழா நேற்று 06.08.2017 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. காலை முத்துக்குமாரசுவாமி வள்ளி தேவயானை சமேதராக சிறிய கைலாச வாகனத்தில் உள்வீதியுலா வந்தார்.
மாலை 6 மணிக்கு மஞ்சத்திருவிழா இடம்பெற்றது. மஞ்சத்தில் முத்துக்குமாரசுவாமி வள்ளி தேவயானை அம்மையருடன் தனித்தனிச் சாத்துப்படிகளில் உலா வந்தார்.
தெற்கு வாயில் கோபுரத்தருகே வழமையாகப் பாடப்படும் கந்தரனுபூதியில் கார்மாமிசைக் காலன் வரின் எனத் தொடங்கும் பாடல் பாடப்பட்டது.
ஈசான திசையில் இடம்பெறும் திருவாசக வழிபாட்டில் அடைக்கலப்பத்துப் பாடல் பாடப்பெற்றது.

இவ்வாண்டு மேற்குலக நாடுகளில் இருந்து புலம்பெயர் தமிழர்கள் மற்றும் ஐரோப்பிய மக்கள் எனப் பலர் நல்லூர் பெருமானைத் தரிசனம் செய்வதற்காக ஆலயத்திற்கு வருகை தருவதைக் காணமுடிகின்றது.
படங்கள்: ஐ.சிவசாந்தன்
0 comments:
Post a Comment