யாழ். குடாநாட்டில் கதலி வாழைப்பழ விலை கடுமையாக உயர்வடைந்துள்ளது.
யாழ். குடாநாட்டின் முக்கிய சந்தையான திருநெல்வேலி மற்றும் மருதனார்மடம், சுன்னாகம் உள்ளிட்ட பொதுச் சந்தைகளில் கடந்த பல நாட்களாக 90 ரூபா முதல் 100 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு கிலோ கதலி வாழைப்பழம் நேற்றைய தினம்(22) 130 ரூபா முதல் 140 ரூபா வரை விற்பனையாகியது.
சைவசமயத்தவர்களின் முக்கிய விரதமான நவராத்திரி விரதம் ஆரம்பமாகியுள்ளமையும் , மற்றும் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலயம் மற்றும் வண்ணை வேங்கடேசப் பெருமாள் ஆலயம் உள்ளிட்ட பல்வேறு ஆலயங்களின் மஹோற்சவங்கள், அலங்கார உற்சவங்கள் ஆரம்பமாகியுள்ளமையே கதலி வாழைப்பழத்தின் திடீர் விலை உயர்விற்குக் காரணமென வியாபாரிகள் தெரிவித்தனர்.
இதேவேளை, குறித்த சந்தைகளில் நேற்றுக் கதலி வாழைப்பழத்தின் வரத்து சடுதியாகக் குறைவடைந்து காணப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment