//]]>

Saturday, September 23, 2017

குடிமனைகளுக்குள் புகுந்துவிடும் பாம்புகளால் பீதியில் மக்கள் (Photos)


வடக்கு மாகாணத்தில் நிலவி வரும் அதிக வெப்பநிலை காரணமாக விச ஜந்துக்கள் மக்களின் குடிமனைகளுக்குள் புகுந்து விடுவதால், உயிர் பாதுகாப்பு தொடர்பில் மக்கள் அச்சம் அடைந்திருப்பதாக தெரியவருகின்றது.

வவுனியா மாவட்டத்தின் காடுகளை அண்மித்த கரையோர கிராமங்களில் சீவித்துவரும் மக்களே அதிகமாக விசக்கடி உள்ளிட்ட ஆபத்துகளை எதிர்கொண்டுள்ளதாக கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர். 

கோவில்மோட்டை, விளாத்திக்குளம், நீலியாமோட்டை, செங்கல்படை, வேலங்குளம், சின்னகுஞ்சுகுளம், சின்னத்தம்பனை கிராமங்களுக்குள் மக்கள் தமது ஜீவனோபாயத்துக்காக வளர்த்துவரும் கால்நடைகளை (ஆடுகள், கோழிகளை) இரையாக உண்பதற்காக புகுந்துவிடும் மலைப்பாம்புகள் கூட, கடந்த சில வாரங்களாக உயிருடன் பிடிக்கப்பட்டு வருவதாகவும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.  




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment