யாழ். வலிகாமத்தின் பல்வேறு பகுதிகளிலும் நச்சுத் தன்மையுள்ள பார்த்தீனியச் செடிக
கடும் வெப்பமுடனான காலநிலை காரணமாக வலிகாமத்தில் வீதியோரங்களையும், வெற்றுக் காணிகளையும் ஆக்கிரமித்திருந்த பார்த்தீனி யச் செடிகள் கருகிய நிலையில் காணப்பட்டன. அத்துடன் விவசாய நிலங்களிலும் பார்த்தீனியத்தின் பரம்பல் குறைவடைந்திருந்தன.
இந்த நிலையில் கடந்த ஒரு மாத்திற்கு முன்னர் பெய்த கடும் மழை காரணமாக வலிகாமத்தில் மீண்டும் பார்த்தீனியத்தின் பரம்பல் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. குறிப்பாக விவசாய நிலங்கள், வீதியோரங்கள், வெற்றுக் காணிகள் எனப் பல்வேறிடங்களிலும் பார்த்தீனியத்தின் பரம்பல் அதிகரித்துள்ளமையை அவதானிக்க முடிகிறது.
எதிர்வரும் மாதங்களில் மாரிகாலம் ஆரம்பிக்கவுள்ளமையால் வலிகாமத்தில் பார்த்தினீயத்தின் பரம்பல் மேலும் அதிகரிக்கும் அபாயம் நிலவுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment