//]]>

Thursday, September 7, 2017

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுப் படுகொலை: பொலிஸாரின் பிணை மனு நிராகரிப்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொக்குவில் குளப்பிட்டிச் சந்திப் பகுதியில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸாரின் பிணை மனுவை யாழ். மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. 

சந்தேகநபர்களான பொலிஸார் சார்பில் அவர்களின் உறவினர்களால் யாழ். மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் முன்னிலையில் நேற்று விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. 

மாணவர்கள் மீதான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் இது தொடர்பான அறிக்கையொன்றினைப் பெற வேண்டியுள்ளதாக அரச தரப்புச் சட்டத்தரணி மன்றிற்கு விண்ணப்பம் செய்தார். 

அவரது விண்ணப்பத்தினை ஏற்றுக் கொண்ட நீதவான் பிணை மனு தொடர்பான விசாரணையை எதிர்வரும்-14 ஆம் திகதிக்குத் தவணையிட்டும் உத்தரவிட்டுள்ளார்.  

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment