யாழ். குடாநாட்டில் இடம்பெற்ற பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புபட்டிருந்த நிலையில் நீண்ட நாட்களாக நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுப் புலனாய்வுத் துறைப் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த நபர் இன்று வெள்ளிக்கிழமை(08) இரவு யாழ்.சா வகச்சேரிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கடந்த காலங்களில் பல்வேறு திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டிருந்ததுடன் பருத்தித் துறை நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டும் தேடப்பட்டு வந்தார்.
இந்நிலையிலேயே இன்றிரவு 7:30 மணியளவில் குறித்த நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரிடம் தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருவதுடன் நாளை சனிக்கிழமை காலை சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் சந்தேகநபரை முற்படுத்தவும் நடவடி க்கை எடுக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment