"மனிதநேய வேர்கள்" எனும் தலைப்பில் இன்றைய தினம் (16.09.2017) மனிதநேயப் பணியாளர்களினால் ஒழுங்கு செய்யப்பட்டு நடாத்தப்பட்டிருந்த மனித நேயப் பணியாளர் அமரர்.பொன்னுத்துரை பாலகிருஷ்ணனின் (முன்னாள் UNHCR நிறுவன பணியாளர் ) நினைவுப் பகிர்வுகளின் நிகழ்வு நாவலர் வீதியில் அமைந்துள்ள தியாகி அறக்கொடை சொர்ணாம்பிகை மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
அந்த நிகழ்வினை வடமாகாண ஆளுனரின் செயலாளர் திரு.இளங்கோ மற்றும் UNHCR நிறுவனப் பணியாளர் திரு.வே.பிரபாகரன் அவர்கள் சுடரேற்றி ஆரம்பித்து வைத்ததுடன், யாழ். மாவட்ட முன்னாள் அரச அதிபர் திரு.செ.பத்மநாதன், ஜெசாக் நிறுவன இணைப்பாளர் திரு.ந.சுகிர்தராஜ், CFCD நிறுவன நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.சொ.யோகநாதன் ஆகியோர் நினைவுரைகளை ஆற்றி இருந்தனர்.
யாழ் மாவட்டத்தின் உளவள ஆலோசகர் திருமதி.கோகிலா மகேந்திரன் அவர்களின் சிறப்பு பேருரை நிகழ்வும் இடம்பெற்றிருந்தது.
சமூக சேவகர் பொ. பாலகிருஷ்ணனின் ஞாபகார்த்தமாக அண்மையில் கொழும்பில் வெளியிட்டு வைக்கப்பட்ட 'மலரும் நினைவுகள்' நூலும் நிகழ்வுக்கு வந்திருந்தவர்களிடம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் அரச திணைக்கள, அரச சார்பற்ற நிறுவன பணியாளர்கள், நண்பர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம் சிறுவர்களுக்கான அபிவிருத்தி நிலைய நிறைவேற்றுப் பணிப்பாளர் சொ. யோகநாதன் மற்றும் பலரும் இந்நிகழ்வு சிறப்புற இடம்பெற கடினமாக உழைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment