//]]>

Saturday, September 16, 2017

வடக்கு முதலமைச்சருக்கு முன்னாள் அரச அதிபர் சாட்டை (Photos)


"மனிதநேய வேர்கள்" எனும் தலைப்பில் இன்றைய தினம் (16.09.2017) மனிதநேயப் பணியாளர்களினால்   ஒழுங்கு செய்யப்பட்டு நடாத்தப்பட்டிருந்த மனித நேயப் பணியாளர் அமரர்.பொன்னுத்துரை பாலகிருஷ்ணனின் (முன்னாள் UNHCR நிறுவன பணியாளர் ) நினைவுப் பகிர்வுகளின் நிகழ்வு நாவலர் வீதியில் உள்ள TCT  மண்டபத்தில் இடம்பெற்றது.

அம்மண்டபத்தில் முன்னாள் அரச அதிபரின் உரை பலரது கவனத்தையும் ஈர்த்தது.

நான் அரசியல்வாதி ஒருவரையும் விபரித்துச் சொல்ல விரும்பவில்லை. ஆனால், அண்மையில் செஞ்சோலை பிள்ளைகளை சந்தித்த அரசியல்வாதி ஒருவர் அவர்களை பொலிஸ் சேவையில் சேர வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். செஞ்சோலை, போரில் பாதிப்புற்று தாய், தந்தையை இழந்த பிள்ளைகள் மக்களின் அனுசரணையுடன் வாழுமிடமாகும். பொலிஸ், இராணுவ சேவைகள் என்பன தமிழ்மக்களினால் ஓரளவுக்கு நிராகரிக்கப் பட்ட சேவைகளாகும். நீங்கள் பொலிஸ் சேவையில் இணையாவிட்டால் நாங்கள் பொலிஸ் அதிகாரத்தை கேட்டு என்ன பிரயோசனம் என்று கேட்க்கிறார்கள். மக்கள் பொலிஸ் அதிகாரத்தை கேட்டார்களா? இப்படியான அரசியல் தலைமைத்துவம் அந்தக் காலத்தில் இருக்கவில்லை. என்றார் யாழ். மாவட்ட முன்னாள் அரச அதிபர்  திரு.செ.பத்மநாதன்.

வடக்கில் பொலிஸ் சேவை­யில்தான் அதி­க­ள­வான வேலை வாய்ப்­புக்கள் உள்­ளன என்­ப­தனால்   பொலிஸ் சேவையில் இணைய முன்­வர வேண்டும் என வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்கி­னேஸ்­வரன் செஞ்சோலை சிறு­வர்­க­ளிடம் அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment