இன்று செவ்வாய்கிழமை(12) பிற்பகல்- 2.30 மணியளவில் யாழ். மாவட்டச் செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் திணைக்கள மாவட்ட அலுவலகத்தில் குறித்த கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
வட மத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ். எம் ரஞ்சித், கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் ரஜீவ், மற்றும் வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் எனப் பலரும் கட்டுப் பணம் செலுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
சாவகச்சேரி நகரசபைத் தேர்தலுக்கான கட்டுப்பணம் ஏற்கனவே செலுத்தப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் யாழ். மாவட்டத்திலுள்ள ஏனைய அனைத்துத் தேர்தல் தொகுதிகளுக்குமான கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, யாழ். மாவட்டத்தின் அனைத்துத் தேர்தல் தொகுதிகளுக்குமான வேட்புமனுக்கள் விரைவில் தாக்கல் செய்யப்படுமெனக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment