இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
யாழ். பொம்மை வெளிப் பகுதியைச் சேர்ந்த குறித்த வியாபாரி குட்டி ஈனும் தறுவாயில் காணப்பட்ட குறித்த மறி ஆட்டை யாழ். உடுப்பிட்டிப் பகுதியிலிருந்து யாழ். நகரம் நோக்கிக் கடும் சித்திரவதைக்குள்ளாக்கிய நிலையில் வாகனமொன்றில் கொண்டு சென்றுள்ளார்.
இந்நிலையில் யாழ். இரகசியப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் அச்சுவேலி தொழிற்பேட்டைச் சந்தியில் சிவில் உடையில் காத்திருந்த யாழ். பொலிஸ் நிலைய இரகசியப் பொலிஸாரால் குறித்த வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளார். கைதான வியாபாரி அனுமதிப்பத்திரம் எதுவுமின்றி வாகனத்தில் ஆடு ஏற்றிச் சென்றமையும் கண்டறியப்பட்ட நிலையில் ஆடு கைப்பற்றப்பட்டு அச்சுவேலிப் பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளது.
கைதான சந்தேகநபரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
0 comments:
Post a Comment