எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பாக யாழ். மாவட்டத்திற்குள் இடம்பெற்ற ஐந்து சட்டவிரோதச் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை முறைப்பாடு கிடைத்துள்ளதாக யாழ்ப்பாணத் தெரிவத்தாட்சி அலுவலரும், யாழ். மாவட்ட அரசாங்க அதிபருமான நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார். குறித்த ஐந்து முறைப்பாடுகளும் சாவகச்சேரி, பருத்தித்துறை, உடுவில், சண்டிலிப்பாய் மற்றும் வேலணை ஆகிய பிரதேசங்களிலிருந்து கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் பொது இடங்களில் பதாகைகள் மற்றும் சுவரொட்டிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை சம்பந்தமாக மூன்று முறைப்பாடுகளும், அச்சுறுத்தல் மற்றும் சட்தவிரோதமாகக் கட்சி அலுவலகத்தில் நுழைந்தமை சம்பந்தமாக முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
கிடைத்துள்ள முறைப்பாடுகள் சம்பந்தமாக யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இது சம்பந்தமாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment