முஸ்லிம் கலாசார அலுவல்கள் மற்றும் தபால் சேவைகள் அமைச்சின் எற்பாட்டில் தேசிய மீலாத் விழா இன்று சனிக்கிழமை(23) முற்பகல் யாழ். ஒஸ்மானியாக் கல்லூரியில் முஸ்லிம் விவகார அமைச்சர் மொஹமட் ஹலீம் தலைமையில் இடம்பெற்றது. இந்த விழாவில் நாடாளுமன்ற சபாநாயகர் கருஜெயசூரிய பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
இந்த விழாவில் 2017 ஆம் ஆண்டுக்கான தேசிய மீலாத் விழாவினை முன்னிட்டு தேசிய முத்திரை வெளியீடும், யாழ், கிளிநொச்சி மாவட்ட முஸ்லீம் மக்களின் பூர்வீக இடங்கள், வாழ்வியல் ,மற்றும் மீள்குடியேற்றம் ஆகிய பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய நூல் வெளியீடும் இடம்பெற்றது..
தேசிய முத்திரையை முஸ்லிம் விவகார அமைச்சர் மொஹமட் ஹலீம் வெளியிட்டு வைக்கப் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட நாடாளுமன்ற சபாநாயகர் கருஜெயசூரிய பெற்றுக்கொண்டார்.
இதன் போது தேசிய மீலாத் விழா தொடர்பாக மாணவர்கள் மட்டத்தில் நடாத்தப்பட்ட கட்டுரை, கவிதை உள்ளிட்ட போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவ, மாணவிகளுக்கான விருதுகளும், சான்றிதழ்களும் நாடாளுமன்ற சபாநாயகர் கருஐயசூரியவினால் வழங்கி வைக்கப்பட்டன.
0 comments:
Post a Comment