//]]>

Friday, December 22, 2017

யாழிலிருந்து கிளிநொச்சிக்கு கடத்தப்பட்ட ஆடுகள் பாதுகாப்பாக மீட்பு


அனுமதிப்பத்திரம் எதுவுமின்றி யாழ். தெல்லிப்பழை கொல்லங்கலட்டிப் பகுதியிலிருந்து கிளிநொச்சி மாவட்டத்துக்குப் பாரவூர்தியொன்றில் கடத்திச் செல்லப்பட்ட 30 ஆடுகள் அச்சுவேலிப் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளன.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

நேற்று வியாழக்கிழமை(21) அதிகாலை வேளையில் யாழ். தெல்லிப்பழைப் பகுதியிலிருந்து புத்தூர்ப் பகுதியூடாக கிளிநொச்சி மாவட்டத்துக்கு பாரவூர்தியொன்றில்(லொறி) 30 வரையான ஆடுகள் கடத்தப்படுவது தொடர்பாக அச்சுவேலிப் பொலிஸாருக்கு இரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து புத்தூர்ச் சந்தியில் காத்துநின்ற பொலிஸார் மேற்படி பாரவூர்தியை இடைமறித்துச் சோதனை மேற்கொண்டனர்.

இதன் போது அனுமதிப்பத்திரமன்றி ஆடுகள் கிளிநொச்சி மாவட்டத்திற்குக் கொண்டு செல்லப்படுவது கண்டறியப்பட்டது. இதனையடுத்து முப்பது ஆடுகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேகத்தின் பேரில் சிலர் கைது செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment