//]]>

Saturday, December 16, 2017

வடக்குமாகாணப் பிராந்திய அலுவலகம் அங்குரார்ப்பணம்(Videos)

ந்து சமய கலாசார கற்கைகள் நிறுவகத்தின் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பயிற்சி நிலையம் மற்றும் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் வடக்கு மாகாணப் பிராந்திய அலுவலக அங்குரார்ப்பண வைபவம் நேற்று வெள்ளிக்கிழமை(15) முற்பகல்-10  மணி முதல் யாழ். பருத்தித்துறை வீதியில் அமைந்துள்ள இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் குருகுல வளாகத்தில் இடம்பெற்றது. 

இந்த விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி. எம். சுவாமிநாதன் ந்துசமய கலாசார கற்கைகள் நிறுவகத்தின் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பயிற்சி நிலையம் மற்றும் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் வடக்கு மாகாணப் பிராந்திய அலுவலகத்தைச் சம்பிரதாயபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.  நல்லை ஆதீனகுரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் இந்த நிகழ்விற்கு முன்னிலை வகித்தார். 

இந்த விழாவின் போது யாழ். மாவட்டத்தில் இயங்கி வரும் கோண்டாவில் சிவபூமி மனவிருத்திப் பாடசாலை,  சைவவித்தியா விருத்திச் சங்கம், கருணாலயம், அன்னை கிருஷ்ணபாய் சிறுவர் இல்லம், பரமானந்த சிறுவர் இல்லம் ஆகிய இந்துசமயம் சார்ந்த சிறுவர் இல்லங்களுக்கு சிறுவர் கல்விக்கான நிதிக்கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

அத்துடன் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த பின்தங்கிய கிராமங்களைச் சேர்ந்த 15 அறநெறி ஆசிரியர்களுக்கு இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் இந்துப் பண்பாட்டு நிதியத்திலிருந்து துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.  இதன் போது அறநெறி ஆசிரியர்களுக்கான அடிப்படைப் பயிற்சிகள் சான்றிதழ் பயிற்சி நெறியும் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

இந்த விழாவில் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் அ. உமாமகேஸ்வரன், சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன், யாழ். பல்கலைக்கழக சமஸ்கிருதத்துறைத் தலைவர் சிவஸ்ரீ பத்மநாதன்,  கனடா சைவசித்தாந்த பீட இயக்குனர் டாக்டர் லம்போதரன், முதுபெரும் சைவப்புலவர்  சு.செல்லத்துரை, கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் பிரதி அதிபர் ச. லலீசன், ஈழத்தின் மூத்த கவிஞர் சோ. பத்மநாதன், அறநெறிப் பாடசாலை ஆசிரியர்கள், இந்து கலாசார உத்தியோகத்தர்கள், 
மாணவர்கள், சைவத்தமிழ் ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். 


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment